Tuesday, November 20, 2018

குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை வெதர்மேன் ரிப்போர்ட்


Tamil Nadu Weatherman Special Update - The nature balancing spell for North TN will start from tomorrow including KTC belt
----------------------------------------------
The Depression in Bay of Bengal is expected to move in an North-North Westerly direction and move towards Cuddalore region around 21st morning. Wind Shear is so less, it is expected to intensify a lot tomorrow into even Deep Depression and by that time it will be close to land. Not sure if it can become a cyclone or not as it is near the land. The conditions are damn favorable. If it becomes a weak cyclone, then it should not be a surprise too. The Depression is expected to move in West-North Westerly direction which means Northern Areas of the Depression will have clouds, so this time North TN cannot miss this spell.

Heavy to very heavy and also extreme rains
------------------------------
Cuddalore - Pondy - Villupuram are the hot spot of very very heavy rains while Karaikkal, Thanjavur, Nagai, Ariyalur, Perambalur, Kancheepuram, Tiruvallur, Chennai, Tiruvannamalai will all see heavy rains. Other districts nearby can catch a good spell.

"Surely this spell deserves a Red alert warning for Tamil Nadu particularly for NTN districts" - There is going to be some serious rains to be dumped in the NTN districts.

Chennai - heavy rains can be expected from tonight / 21st morning.
-----------------------
Moderate Rains to start today with on and off spell and it will turn into heavy spells from 20th Night and 21st morning and again rains will extend 22nd and then from 23rd rains will start to reduce. Make or break rains means, Chennai normally gets 850 mm rainfall during NEM in 3 months. Till date it has got only 225 mm. The next 3 days rains are important. Chennai cant afford to miss this spell. This spell alone cant make lakes around Chennai full. We need atleast one more spell in Chennai after this spell. So if 20th morning rains are less. Dont comment no rains. Peak rains are expected for Chennai only from Night. Yaravathu No rain in Chennai. No rain in Kilpauk. No rain in Santhome Pottenga semma tension ayuduvan!!!!

Rain Water Harvesting
----------------------
Dont miss to conserve water from the incoming rains in Chennai through Rain water harvesting. Do clean them and keep it ready.

North Interiors
--------------------
Even Dharmapuri, Krishnagiri, Salem, Vellore, Namakkal will all catch atleast one day of rains.

Cyclone Gaja affected areas
-------------------------------------
Nagai, Thanjavur,will see heavy rains on 20-21st and among the other Cyclone affected areas Pudukottai and Tiruvarur will see one day of moderate rains.

Winds
------------
Winds of this system should not be compared with Gaja. This hardly has one day left for crossing the coast.  If it manages to remain in open seas it might intensify further. As of now Depression is confirmed and might even become Deep Depression. 50-60 km/hr sustained winds can be expected from this system around North TN districts of Cuddalore, Pondy regions.

Next active spells - Monsoon is not over
---------------------
Tamil Nadu till date this NEM has got only 243 mm rains against 305 mm. The next 3 days rains might push TN even into positive territory or close to that figure. MJO will be back in December in our basin and this should trigger some more major rains for Tamil Nadu. In between some weak spells might happen.
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு, வடமேற்காக நகர்ந்து, கடலூர் பகுதியை நோக்கி 21-ம் தேதி செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தில் காற்று பலமாக வீசாது, இது நாளை நிலப்பகுதி அருகே வரும்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறுமா என்பதை உறுதியாகக் கூற இயலாது. ஆனால் அதற்கான சூழல்கள் சாதகமாக இருக்கின்றன. அது ஒருவேளை வலுவிழந்த புயலாக இருந்தால்கூட, வியப்படையக்கூடாது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, வடக்கு நோக்கி மேகக்கூட்டங்களை இழுத்துச் செல்லும். இதன் காரணமாக வடதமிழகத்தில் நல்ல மழை பெய்யும்.
கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்கள், புதுச்சேரி மாநிலம் ஆகியவற்றில் மிக, மிக கனமழை பெய்யும். காரைக்கால், தஞ்சை, நாகை, அரியலூர், பெரம்பலூர், காஞ்சிபுரம், சென்னை, திருவண்ணாமலை, அதை ஒட்டிய மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும்.
வடதமிழகத்தில் பெய்யும் இந்த மிக கனமழையால், ரெட் அலர்ட் எச்சரிக்கை விடக்கூடும். ஏனென்றால், வடதமிழகத்தில் தீவிரமான மழை பொழிவு இருக்கும்.
சென்னையில் இன்று முதல் மிதமான மழை ஆங்காங்கே இடைவெளி விட்டு பெய்யக்கூடும். இன்று இரவு முதல் கனமழை பெய்யும். நாளை காலையில் மீண்டும்  மழை பெய்யும், இந்த மழை 22-ம் தேதி வரை நீடிக்கும். 23-ம் தேதியில் இருந்து மழை படிப்படியாகக் குறையும்.
சென்னையில் வடகிழக்கு பருவமழை காலத்தில் 850மிமீ மழை சராசரியாகப் பெய்யும், ஆனால், தற்போதுவரை 225 மிமீ மழை பதிவாகியுள்ளது. அடுத்த 3 நாட்கள் சென்னைக்கு மிக முக்கியமானது. இந்த மழையை சென்னை தவறவிடாது.
தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், வேலூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில்கூட ஒருநாள் மழை இருக்கும்.
நாகை, தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர் ஆகிய கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தில் வீசப்படும் காற்றை  கஜா புயலோடு ஒப்பிட முடியாது. இது கடற்கரைப் பகுதியை கடக்க ஒரு நாள் ஆகும். இது நிலப்பகுதியை அடையும் போது வலுவடையவும் வாய்ப்புள்ளது. தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலம் என்பது உறுதியாகியுள்ளது, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் மாறலாம். இதனால், 50 முதல் 60 கி.மீ வரை வடதமிழக மாவட்டங்கள், கடலூர், புதுசேரியில் காற்றுவீசக்கூடும்

தமிழகத்துக்கு வடகிழக்குப்பருவமழையின் மூலம் இதுவரை 305மிமீ மழை பதிவாகி இருக்க வேண்டும், ஆனால், இதுவரை 243 மிமீ மழை மட்டுமே கிடைத்திருக்கிறது. அடுத்த 3 நாட்கள் வடதமிழகத்தில் மழை இன்னும் தீவிரமாகி, எதிர்பார்த்த மழை பொழிவு கிடைக்கும்.
டிசம்பர் மாதம் மீண்டும் எம்ஜேஓ நம்முடைய கடற்பகுதிக்கு வருகிறது. இதனால், தமிழகத்துக்கு கூடுதலாக மழை கிடைக்க வாய்ப்புள்ளது

No comments:

Post a Comment